இப்பள்ளி 1956ஆம் ஆண்டு திரு. R. M மாரியப்ப நாடார் அவர்கள் இந்து நாடார் உறவின் முறை தலைவராக இருந்தபோது திரு S. A அருஞ்சுனை நாடார் மற்றும் பெரியோர்களின் சீரிய முயற்சியால் வட்டார மக்களுக்காக சாதி, மத, இன பேதமின்றி அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி உயர்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டது.
இப்பள்ளியின் முதலாம் மேலாளராக திரு R. M. மாரியப்ப நாடார் பொறுப்பேற்று 1956 ஆம் ஆண்டு முதல் 1963ஆம் ஆண்டு வரை சிறப்பாக பணியாற்றினார். அன்றைய காலச் சூழ்நிலையில் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள் சம்பளத்திற்காக உறவின்முறை உறுப்பினர்கள் சந்தா தொகையை தானே செலுத்தி உதவி புரிந்துள்ளார் மறைந்த திரு K. பாலகிருஷ்ணன் மற்றும் திரு A. ராமச்சந்திரன் நாடார் ஆகியோரின் சேவை பாராட்டுக்குரியது
1961 ஆண்டு முதல் 1963 வரை சென்னைவாழ் கடம்பூர் இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் திரு T. N சோமசுந்தர நாடார் அவர்கள் மேலாளராகப் பணியாற்றினார்.
அன்னார் பொறுப்பிலிருந்து விலகிய பின்னர் 1963 ஆம் ஆண்டு ஜூன் முதல் திரு S. A தங்கப்ப நாடார் திரு R. M. S ராஜமாரியப்ப நாடார் மற்றும் திரு K. அழகு ராஜன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு திரு S. A தங்கப்ப நாடார் அவர்கள் மேலாளராக பொறுப்பேற்றார். அன்னார் 1963 முதல் 28 வரை மேலாளராகப் பணியாற்றினார் .
1973 தனியார் பள்ளிகளின் ஒழுங்கும் முறைச் சட்டம் அமல்படுத்திய பின்னர் செயலாளர் என்ற பெயர் ஏற்பட்டது. பள்ளியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு முந்தைய பள்ளி வளாகத்தில் பள்ளியின் மேற்கு பக்கம் பெரும் முயற்சி செய்து நிலம் வாங்கி பல வகுப்பறைகள் கட்டி அரும்பணியாற்றினார். மாணவர்களின் நலன் கருதி மிகுந்த எண்ணிக்கையில் இருக்கைகள் வசதி செய்தது இன்றளவும் பெயர் சொல்லிக் கொண்டிருக்கிறது.
1978 ஜூன் முதல் 1984 மே வரை திரு. R. M. S நடராஜன் அவர்கள் பள்ளி செயலாளராக பணியாற்றினார. அவர் தம் பணிக்காலத்தில் 1979 இல் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
1984 ஜூன் முதல் 1996 மே வரை முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் திரு M. R. ஜனார்த்தனன் அவர்கள் செயலாளராக பணி புரிந்தார்.
1996 ஜூன் முதல் 1999 மே வரையிலான காலத்தில் திரு. A சவுந்தரபாண்டியன் B.Sc., (சென்னைவாழ் கடம்பூர் இந்து நாடார் உறவின்முறை தலைவர்) அவர்கள் செயலாளராக பணியாற்றினார். அன்னாரின் பணி காலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு வழி வகை செய்யப்பட்டது.
1999 ஜூன் முதல் தற்போது வரை திரு அரசன் கா. கணேசன் , B. E., அவர்கள் செயலாளராக பணிபுரிந்து வருகிறார். அன்னாரின் பள்ளி காலத்தில் பள்ளியின் நலன் கருதி 2000 மே மாதம் பள்ளியின் சுற்றுச்சுவர், வகுப்பறைகள், மற்றும் கணினி ஆய்வகம் கட்டுவதற்கு பெரும் முயற்சி எடுத்து கட்டப்பட்டது. 2002 ஆம் ஆண்டு வகுப்பறைகள் வேதியியல் ஆய்வு கூடம் மற்றும் இயற்பியல் ஆய்வு கூடம் புதுப்பிக்கப்பட்டது.
2007ல் பள்ளியின் வடபகுதி முழுவதும் TMB கல்வி வளர்ச்சி நிதி மற்றும் நன்கொடை மூலம் முழுவதுமாக கான்கிரீட் கட்டிடமாக கட்டப்பட்டது. 2010ல் ஆங்கில வழிக் கல்விக்கான வகுப்பறைகள் கட்டப்பட்டன.
2008 ஆண்டு மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகள் நமது பள்ளியில் நடைபெற்றது. போட்டிக்கான செலவுகளை சென்னைவாழ் கடம்பூர் இந்து நாடார் உறவின்முறை மகிமை பரிபாலனத்தின் தலைவர் திரு சௌந்தரபாண்டியன் B.sc,m அவர்கள் ஏற்றுக் கொண்டார்.
பள்ளியில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக Smart Class 2013 ஆம் ஆண்டில் பொருத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. தமிழக அரசு உத்தரவின்படி பள்ளியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. நமது நிர்வாகத்தின் கீழ் இயங்கும் சான்றோர் நடுநிலை பள்ளியில் இருந்து 6, 7 மற்றும் 8ஆம் வகுப்பு பள்ளிக்கல்வி இயக்குனரின் ஆணை மூலம் ஈர்த்துக் கொள்ளப்பட்டு 01.06.2015 முதல், 6 முதல் 12 வரை வகுப்பு வரையிலான மேல்நிலைப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது.