இன்று (14.11.2019) நமது பள்ளியில் தலைமையாசிரியர் திரு.செ. ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. நாட்டு நலப்பணித்திட்ட திட்ட அலுவலர் திருமதி இன்பேண்ட் ஜீசஸ் லதா அவர்கள் முன்னிலையில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு காலை வழிபாட்டுக் கூட்டத்தில் குழந்தைகள் தின விழா உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஆசிரியர் ஜோ சூசை மரியான் அவர்கள் உறுதிமொழி வாசிக்க அனைத்து மாணவர்களும் உறுதிமொழியை மேற்கொண்டனர். இந்நிகழ்வில் அனைத்து ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் மாணவ மாணவியரும் கலந்து கொண்டனர்
குடியரசு தின விழா
26.01.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று நாடார் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினம் கோலாகலமாக நடைபெற்றது. கடம்பூர் இந்து நாடார்கள் உறவுமுறை பொதுச்செயலாளர் திரு S A T காலேஜ் அவர்கள் தலைமை வகித்து தலைமை உரை ஆற்றினார். பள்ளி செயலாளர் திரு அரசன் கணேசன் அவர்கள் முன்னிலை வகித்தார். கடம்பூர் காவல்துறை ஆய்வாளர் திரு ஜெயசீலன் அவர்கள் தேசிய கொடி ஏற்றி சிறப்புரை ஆற்றினார். பள்ளி தலைமை ஆசிரியர் திரு ஜெயக்குமார் அவர்கள் வரவேற்றுப் பேசினார். கடம்பூர் இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் திரு ஜெயராஜ் மற்றும் பொருளாளர் திரு அருணாசலம் நாடார் அவர்கள் உரையாற்றினார். முன்னாள் சான்றோர் பள்ளி செயலாளர் திரு அழகு ராஜன் அவர்கள் பள்ளி ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் திரு புங்க ராஜன் அவர்கள் திரு முத்து கிருஷ்ணன் அவர்கள் மற்றும் திரு பழனி குமார் அவர்கள் பங்கேற்றனர். மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியர் திரு ராமச்சந்திரன் அவர்கள் நன்றி கூறினார். மாணவ மாணவியருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது